அனைவருக்கும் பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை .
வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும் (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் , அனைத்து தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் .
இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை .
குணங்களையும் கடந்து, அனைத்து தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை .
அனைத்து பூஜைகளுக்கும் தொடக்கத்தில் அவர் வழிபடப்படுகிறார் .
மேலும் எளியருக்கு உகந்த தெய்வம் .
ஆலயங்கள் கேட்பதில்லை .குளத்தடி,அரச மரத்தடி போதும்.
எளிய துதிகள் போதும்.
மஞ்சள் மற்றும் மண்ணால் அவரைப்பிடித்து வழிபடலாம்.பார்வதி அவரை கடல் நுரையாலும் ,சிவன் மஞ்சளினாலும் வழிபட்டுள்ளனர் .
உபநிஷத்தில் உயர்ந்தது Ganopanisad.தமிழில் உயர்ந்த ஞான நூல் அவ்வை அருளிய விநாயகர் அகவல் ,அனைத்து தத்துவங்களும் யோகமும் கூறப்பட்டுள்ளது .
வெள் எருக்கினால் செய்த விநாயகரை பூசித்தல் மிகவும் சிறந்தது.
மேலும் இந்துமதம் மற்றும் இந்து தத்துவங்களைப் பற்றி அறியவேண்டுமெனில் இந்ததளத்தில் வினாக்கள் தொடுக்கலாம் .இயன்றவரை ஆதார பூர்வமான விடை அளிக்க முயல்கிறேன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending